| |
குறள்
1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற
|
விளக்கம்
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
|
Couplet
1181
I willed my lover absent should remain; Of pining's sickly hue to whom shall I complain
|
Explanation
I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow
|
Transliteration
Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven Panpiyaarkku Uraikko Pira
|
Permalink |
Report
|
|
குறள்
1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு
|
விளக்கம்
பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!
|
Couplet
1182
'He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makes
|
Explanation
Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person
|
Transliteration
Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen Menimel Oorum Pasappu
|
Permalink |
Report
|
|
குறள்
1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து
|
விளக்கம்
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்
|
Couplet
1183
Of comeliness and shame he me bereft, While pain and sickly hue, in recompense, he left
|
Explanation
He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness
|
Transliteration
Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa Noyum Pasalaiyum Thandhu
|
Permalink |
Report
|
|
குறள்
1184
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு
|
விளக்கம்
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
|
Couplet
1184
I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betray
|
Explanation
I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful
|
Transliteration
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal Kallam Piravo Pasappu
|
Permalink |
Report
|
|
குறள்
1185
உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென் மேனி பசப்பூர் வது
|
விளக்கம்
என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்
|
Couplet
1185
My lover there went forth to roam; This pallor of my frame usurps his place at home
|
Explanation
Just as my lover departed then, did not sallowness spread here on my person ?
|
Transliteration
Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen Meni Pasappoor Vadhu
|
Permalink |
Report
|
|
குறள்
1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
|
விளக்கம்
விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது
|
Couplet
1186
As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace
|
Explanation
Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse
|
Transliteration
Vilakkatram Paarkkum Irulepol Konkan Muyakkatram Paarkkum Pasappu
|
Permalink |
Report
|
|
குறள்
1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு
|
விளக்கம்
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
|
Couplet
1187
I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on me
|
Explanation
I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on
|
Transliteration
Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil Allikkol Vatre Pasappu
|
Permalink |
Report
|
|
குறள்
1188
பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல்
|
விளக்கம்
இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே
|
Couplet
1188
On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'
|
Explanation
Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her"
|
Transliteration
Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith Thurandhaar Avarenpaar Il
|
Permalink |
Report
|
|
குறள்
1189
பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்
|
விளக்கம்
பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!
|
Couplet
1189
Well let my frame, as now, be sicklied o'er with pain, If he who won my heart's consent, in good estate remain
|
Explanation
If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow
|
Transliteration
Pasakkaman Pattaangen Meni Nayappiththaar Nannilaiyar Aavar Enin
|
Permalink |
Report
|
|
குறள்
1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்
|
விளக்கம்
என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!
|
Couplet
1190
'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrain
|
Explanation
It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then)
|
Transliteration
Pasappenap Perperudhal Nandre Nayappiththaar Nalkaamai Thootraar Enin
|
Permalink |
Report
|
|