| |
குறள்
331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை
|
விளக்கம்
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்
|
Couplet
331
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure
|
Explanation
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)
|
Transliteration
Nillaadha Vatrai Nilaiyina Endrunarum Pullari Vaanmai Katai
|
Permalink |
Report
|
|
குறள்
332
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று
|
விளக்கம்
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்
|
Couplet
332
As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances cease
|
Explanation
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly
|
Transliteration
Kooththaattu Avaik Kuzhaath Thatre Perunjelvam Pokkum Adhuvilin Thatru
|
Permalink |
Report
|
|
குறள்
333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்
|
விளக்கம்
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்
|
Couplet
333
Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employ
|
Explanation
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable
|
Transliteration
Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal Arkupa Aange Seyal
|
Permalink |
Report
|
|
குறள்
334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின்
|
விளக்கம்
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்
|
Couplet
334
As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy life
|
Explanation
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life
|
Transliteration
Naalena Ondrupor Kaatti Uyir Eerum Vaaladhu Unarvaarp Perin
|
Permalink |
Report
|
|
குறள்
335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும்
|
விளக்கம்
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்
|
Couplet
335
Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath, Arouse thyself, and do good deeds beyond the power of death
|
Explanation
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent
|
Transliteration
Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai Mersendru Seyyap Patum
|
Permalink |
Report
|
|
குறள்
336
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு
|
விளக்கம்
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்
|
Couplet
336
Existing yesterday, today to nothing hurled!- Such greatness owns this transitory world
|
Explanation
This world possesses the greatness that one who yesterday was is not today
|
Transliteration
Nerunal Ulanoruvan Indrillai Ennum Perumai Utaiththuiv Vulaku
|
Permalink |
Report
|
|
குறள்
337
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல
|
விளக்கம்
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்
|
Couplet
337
Who know not if their happy lives shall last the day, In fancies infinite beguile the hours away
|
Explanation
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment
|
Transliteration
Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa Kotiyum Alla Pala
|
Permalink |
Report
|
|
குறள்
338
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு
|
விளக்கம்
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்
|
Couplet
338
Birds fly away, and leave the nest deserted bare; Such is the short-lived friendship soul and body share
|
Explanation
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty
|
Transliteration
Kutampai Thaniththu Ozhiyap Pulparan Thatre Utampotu Uyiritai Natpu
|
Permalink |
Report
|
|
குறள்
339
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு
|
விளக்கம்
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு
|
Couplet
339
Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep
|
Explanation
Death is like sleep; birth is like awaking from it
|
Transliteration
Urangu Vadhupolunj Chaakkaatu Urangi Vizhippadhu Polum Pirappu
|
Permalink |
Report
|
|
குறள்
340
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு
|
விளக்கம்
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது
|
Couplet
340
The soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knows
|
Explanation
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home
|
Transliteration
Pukkil Amaindhindru Kollo Utampinul Thuchchil Irundha Uyirkku
|
Permalink |
Report
|
|