| |
குறள்
411
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை
|
விளக்கம்
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்
|
Couplet
411
Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent
|
Explanation
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth
|
Transliteration
Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam Selvaththu Lellaan Thalai
|
Permalink |
Report
|
|
குறள்
412
செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்
|
விளக்கம்
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்
|
Couplet
412
When 'tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body's need
|
Explanation
When there is no food for the ear, give a little also to the stomach
|
Transliteration
Sevikkuna Villaadha Pozhdhu Siridhu Vayitrukkum Eeyap Patum
|
Permalink |
Report
|
|
குறள்
413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து
|
விளக்கம்
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்
|
Couplet
413
Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share
|
Explanation
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices
|
Transliteration
Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin Aandraaro Toppar Nilaththu
|
Permalink |
Report
|
|
குறள்
414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை
|
விளக்கம்
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்
|
Couplet
414
Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stay
|
Explanation
Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity
|
Transliteration
Katrila Naayinung Ketka Aqdhoruvarku Orkaththin Ootraan Thunai
|
Permalink |
Report
|
|
குறள்
415
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
|
விளக்கம்
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்
|
Couplet
415
Like staff in hand of him in slippery ground who strays Are words from mouth of those who walk in righteous ways
|
Explanation
The words of the good are like a staff in a slippery place
|
Transliteration
Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre Ozhukka Mutaiyaarvaaich Chol
|
Permalink |
Report
|
|
குறள்
416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
|
விளக்கம்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
|
Couplet
416
Let each man good things learn, for e'en as he Shall learn, he gains increase of perfect dignity
|
Explanation
Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity
|
Transliteration
Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum Aandra Perumai Tharum
|
Permalink |
Report
|
|
குறள்
417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்
|
விளக்கம்
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்
|
Couplet
417
Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who've learning's ample lessons heard
|
Explanation
Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction)
|
Transliteration
Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa Rizhaiththunarn Theentiya Kelvi Yavar
|
Permalink |
Report
|
|
குறள்
418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி
|
விளக்கம்
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்
|
Couplet
418
Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear
|
Explanation
The ear which has not been bored by instruction, although it hears, is deaf
|
Transliteration
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal Thotkap Pataadha Sevi
|
Permalink |
Report
|
|
குறள்
419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது
|
விளக்கம்
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது
|
Couplet
419
'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard
|
Explanation
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction
|
Transliteration
Nunangiya Kelviya Rallaar Vanangiya Vaayina Raadhal Aridhu
|
Permalink |
Report
|
|
குறள்
420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென்
|
விளக்கம்
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்
|
Couplet
420
His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous live
|
Explanation
What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?
|
Transliteration
Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal Aviyinum Vaazhinum En?
|
Permalink |
Report
|
|