| |
குறள்
631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு
|
விளக்கம்
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்
|
Couplet
631
A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge
|
Explanation
The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself)
|
Transliteration
Karuviyum Kaalamum Seykaiyum Seyyum Aruvinaiyum Maantadhu Amaichchu
|
Permalink |
Report
|
|
குறள்
632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு
|
விளக்கம்
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்
|
Couplet
632
A minister must greatness own of guardian power, determined mind, Learn'd wisdom, manly effort with the former five combined
|
Explanation
The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness,
|
Transliteration
Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu Aindhutan Maantadhu Amaichchu
|
Permalink |
Report
|
|
குறள்
633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு
|
விளக்கம்
அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்
|
Couplet
633
A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide
|
Explanation
The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him)
|
Transliteration
Piriththalum Penik Kolalum Pirindhaarp Poruththalum Valla Thamaichchu
|
Permalink |
Report
|
|
குறள்
634
தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு
|
விளக்கம்
ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்
|
Couplet
634
A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive word
|
Explanation
The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity)
|
Transliteration
Theridhalum Therndhu Seyalum Orudhalaiyaach Chollalum Valladhu Amaichchu
|
Permalink |
Report
|
|
குறள்
635
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை
|
விளக்கம்
அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்
|
Couplet
635
The man who virtue knows, has use of wise and pleasant words With plans for every season apt, in counsel aid affords
|
Explanation
He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of
|
Transliteration
Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun Thiranarindhaan Therchchith Thunai
|
Permalink |
Report
|
|
குறள்
636
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை
|
விளக்கம்
நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது
|
Couplet
636
When native subtilty combines with sound scholastic lore, 'Tis subtilty surpassing all, which nothing stands before
|
Explanation
What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?
|
Transliteration
Madhinutpam Noolotu Utaiyaarkku Adhinutpam Yaavula Munnir Pavai
|
Permalink |
Report
|
|
குறள்
637
செயற்கை அறிந்தக் கடைத்து முலகத் தியற்கை அறிந்து செயல்
|
விளக்கம்
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்
|
Couplet
637
Though knowing all that books can teach, 'tis truest tact To follow common sense of men in act
|
Explanation
Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly
|
Transliteration
Seyarkai Arindhak Kataiththum Ulakaththu Iyarkai Arindhu Seyal
|
Permalink |
Report
|
|
குறள்
638
அறிகொன் றறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்
|
விளக்கம்
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்
|
Couplet
638
'Tis duty of the man in place aloud to say The very truth, though unwise king may cast his words away
|
Explanation
Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice
|
Transliteration
Arikondru Ariyaan Eninum Urudhi Uzhaiyirundhaan Kooral Katan
|
Permalink |
Report
|
|
குறள்
639
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்
|
விளக்கம்
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்
|
Couplet
639
A minister who by king's side plots evil things Worse woes than countless foemen brings
|
Explanation
Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin
|
Transliteration
Pazhudhennum Mandhiriyin Pakkadhadhul Thevvor Ezhupadhu Koti Urum
|
Permalink |
Report
|
|
குறள்
640
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர்
|
விளக்கம்
முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்
|
Couplet
640
For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails
|
Explanation
Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright
|
Transliteration
Muraippatach Choozhndhum Mutivilave Seyvar Thirappaatu Ilaaa Thavar
|
Permalink |
Report
|
|