| |
குறள்
651
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும்
|
விளக்கம்
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்
|
Couplet
651
The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain
|
Explanation
The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired
|
Transliteration
Thunainalam Aakkam Tharuum Vinainalam Ventiya Ellaan Tharum
|
Permalink |
Report
|
|
குறள்
652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை
|
விளக்கம்
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்
|
Couplet
652
From action evermore thyself restrain Of glory and of good that yields no gain
|
Explanation
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)
|
Transliteration
Endrum Oruvudhal Ventum Pukazhotu Nandri Payavaa Vinai
|
Permalink |
Report
|
|
குறள்
653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை ஆஅது மென்னு மவர்
|
விளக்கம்
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்
|
Couplet
653
Who tell themselves that nobler things shall yet be won All deeds that dim the light of glory must they shun
|
Explanation
Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame)
|
Transliteration
Oodhal Ventum Olimaazhkum Seyvinai Aaadhum Ennu Mavar
|
Permalink |
Report
|
|
குறள்
654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்
|
விளக்கம்
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்
|
Couplet
654
Though troubles press, no shameful deed they do, Whose eyes the ever-during vision view
|
Explanation
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers)
|
Transliteration
Itukkan Patinum Ilivandha Seyyaar Natukkatra Kaatchi Yavar
|
Permalink |
Report
|
|
குறள்
655
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று
|
விளக்கம்
`என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று
|
Couplet
655
Do nought that soul repenting must deplore, If thou hast sinned, 'tis well if thou dost sin no more
|
Explanation
Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not
|
Transliteration
Etrendru Iranguva Seyyarka Seyvaanel Matranna Seyyaamai Nandru
|
Permalink |
Report
|
|
குறள்
656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
|
விளக்கம்
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது
|
Couplet
656
Though her that bore thee hung'ring thou behold, no deed Do thou, that men of perfect soul have crime decreed
|
Explanation
Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)
|
Transliteration
Eendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka Saandror Pazhikkum Vinai
|
Permalink |
Report
|
|
குறள்
657
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை
|
விளக்கம்
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்
|
Couplet
657
Than store of wealth guilt-laden souls obtain, The sorest poverty of perfect soul is richer gain
|
Explanation
Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful
|
Transliteration
Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror Kazhinal Kurave Thalai
|
Permalink |
Report
|
|
குறள்
658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும்
|
விளக்கம்
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்
|
Couplet
658
To those who hate reproof and do forbidden thing What prospers now, in after days shall anguish bring
|
Explanation
The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow
|
Transliteration
Katindha Katindhoraar Seydhaarkku Avaidhaam Mutindhaalum Peezhai Tharum
|
Permalink |
Report
|
|
குறள்
659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை
|
விளக்கம்
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்
|
Couplet
659
What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow
|
Explanation
All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit
|
Transliteration
Azhak Konta Ellaam Azhappom Izhappinum Pirpayakkum Narpaa Lavai
|
Permalink |
Report
|
|
குறள்
660
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துணீர் பெய்திரீஇ யற்று
|
விளக்கம்
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்
|
Couplet
660
In pot of clay unburnt he water pours and would retain, Who seeks by wrong the realm in wealth and safety to maintain
|
Explanation
(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water
|
Transliteration
Salaththaal Porulseydhe Maarththal Pasuman Kalaththulneer Peydhireei Yatru
|
Permalink |
Report
|
|