| |
குறள்
711
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்
|
விளக்கம்
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்
|
Couplet
711
Men pure in heart, who know of words the varied force, Should to their audience known adapt their well-arranged discourse
|
Explanation
Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled)
|
Transliteration
Avaiyarinadhu Aaraaindhu Solluka Sollin Thokaiyarindha Thooimai Yavar
|
Permalink |
Report
|
|
குறள்
712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்
|
விளக்கம்
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்
|
Couplet
712
Good men to whom the arts of eloquence are known, Should seek occasion meet, and say what well they've made their own
|
Explanation
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court)
|
Transliteration
Itaidherindhu Nankunarndhu Solluka Sollin Nataidherindha Nanmai Yavar
|
Permalink |
Report
|
|
குறள்
713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல்
|
விளக்கம்
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது
|
Couplet
713
Unversed in councils, who essays to speak Knows not the way of suasive words,- and all is weak
|
Explanation
Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning)
|
Transliteration
Avaiyariyaar Sollalmer Kolpavar Sollin Vakaiyariyaar Valladhooum Il
|
Permalink |
Report
|
|
குறள்
714
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்
|
விளக்கம்
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்
|
Couplet
714
Before the bright ones shine as doth the light Before the dull ones be as purest stucco white
|
Explanation
Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools
|
Transliteration
Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun Vaansudhai Vannam Kolal
|
Permalink |
Report
|
|
குறள்
715
நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு
|
விளக்கம்
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்
|
Couplet
715
Midst all good things the best is modest grace, That speaks not first before the elders' face
|
Explanation
The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities
|
Transliteration
Nandrendra Vatrullum Nandre Mudhuvarul Mundhu Kilavaach Cherivu
|
Permalink |
Report
|
|
குறள்
716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
|
விளக்கம்
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்
|
Couplet
716
As in the way one tottering falls, is slip before The men whose minds are filled with varied lore
|
Explanation
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue)
|
Transliteration
Aatrin Nilaidhalarn Thatre Viyanpulam Etrunarvaar Munnar Izhukku
|
Permalink |
Report
|
|
குறள்
717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொற்றெரிதல் முன்னர் இழுக்கு
|
விளக்கம்
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்
|
Couplet
717
The learning of the learned sage shines bright To those whose faultless skill can value it aright
|
Explanation
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words
|
Transliteration
Katrarindhaar Kalvi Vilangum Kasatarach Choldheridhal Vallaar Akaththu
|
Permalink |
Report
|
|
குறள்
718
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று
|
விளக்கம்
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்
|
Couplet
718
To speak where understanding hearers you obtain, Is sprinkling water on the fields of growing grain
|
Explanation
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves)
|
Transliteration
Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan Paaththiyul Neersorin Thatru
|
Permalink |
Report
|
|
குறள்
719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார்
|
விளக்கம்
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்
|
Couplet
719
In councils of the good, who speak good things with penetrating power, In councils of the mean, let them say nought, e'en in oblivious hour
|
Explanation
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low
|
Transliteration
Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul Nankusalach Chollu Vaar
|
Permalink |
Report
|
|
குறள்
720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்
|
விளக்கம்
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்
|
Couplet
720
Ambrosia in the sewer spilt, is word Spoken in presence of the alien herd
|
Explanation
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground
|
Transliteration
Anganaththul Ukka Amizhdhatraal Thanganaththaar Allaarmun Kotti Kolal
|
Permalink |
Report
|
|