| |
குறள்
741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்
|
விளக்கம்
பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்
|
Couplet
741
A fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woes
|
Explanation
A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter
|
Transliteration
Aatru Pavarkkum Aranporul Anjiththar Potru Pavarkkum Porul
|
Permalink |
Report
|
|
குறள்
742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்
|
விளக்கம்
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்
|
Couplet
742
A fort is that which owns fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest near
|
Explanation
A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests
|
Transliteration
Manineerum Mannum Malaiyum Aninizhar Kaatum Utaiya Tharan
|
Permalink |
Report
|
|
குறள்
743
உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்
|
விளக்கம்
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்
|
Couplet
743
Height, breadth, strength, difficult access: Science declares a fort must these possess
|
Explanation
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz, height, breadth, strength and inaccessibility
|
Transliteration
Uyarvakalam Thinmai Arumaiin Naankin Amaivaran Endruraikkum Nool
|
Permalink |
Report
|
|
குறள்
744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண்
|
விளக்கம்
உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்
|
Couplet
744
A fort must need but slight defence, yet ample be, Defying all the foeman's energy
|
Explanation
A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes
|
Transliteration
Sirukaappir Peritaththa Thaaki Urupakai Ookkam Azhippa Tharan
|
Permalink |
Report
|
|
குறள்
745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண்
|
விளக்கம்
முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்
|
Couplet
745
Impregnable, containing ample stores of food, A fort for those within, must be a warlike station good
|
Explanation
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates
|
Transliteration
Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar Nilaikkelidhaam Neeradhu Aran
|
Permalink |
Report
|
|
குறள்
746
எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும் நல்லா ளுடைய தரண்
|
விளக்கம்
போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்
|
Couplet
746
A fort, with all munitions amply stored, In time of need should good reserves afford
|
Explanation
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes)
|
Transliteration
Ellaap Porulum Utaiththaai Itaththudhavum Nallaal Utaiyadhu Aran
|
Permalink |
Report
|
|
குறள்
747
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரிய தரண்
|
விளக்கம்
முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்
|
Couplet
747
A fort should be impregnable to foes who gird it round, Or aim there darts from far, or mine beneath the ground
|
Explanation
A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it
|
Transliteration
Mutriyum Mutraa Therindhum Araippatuththum Patrar Kariyadhu Aran
|
Permalink |
Report
|
|
குறள்
748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண்
|
விளக்கம்
முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்
|
Couplet
748
Howe'er the circling foe may strive access to win, A fort should give the victory to those who guard within
|
Explanation
That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it
|
Transliteration
Mutraatri Mutri Yavaraiyum Patraatrip Patriyaar Velvadhu Aran
|
Permalink |
Report
|
|
குறள்
749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண்
|
விளக்கம்
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்
|
Couplet
749
At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious day
|
Explanation
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield
|
Transliteration
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu Veereydhi Maanta Tharan
|
Permalink |
Report
|
|
குறள்
750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண்
|
விளக்கம்
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது
|
Couplet
750
Howe'er majestic castled walls may rise, To craven souls no fortress strength supplies
|
Explanation
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action
|
Transliteration
Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi Illaarkan Illadhu Aran
|
Permalink |
Report
|
|